பீகாரில் மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது.  கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   கடந்த 3 நாட்களுக்கு முன் முசாபர்பூரில் உள்ள மருத்துவமனையில் 109 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 குழந்தைகளும்  உயிரிழந்தன. இதனால் பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், முசாபர்பூரிலுள்ள மருத்துவமனையில் 2 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் ஒரு குழந்தையும் உயிரிழந்ததை அடுத்து .  பீகாரில் மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts