பீகார்  மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை129 ஆக  உயர்வு

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு  கடந்த மாதம் வரை 11 குழந்தைகள் உயிரிழந்தனர். . ஆனால் இப்போது அதன் தாக்கம்  திடீரென அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளது.  இதைத் தொடர்ந்து மத்திய நிபுணர் குழு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பீகாரில் மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது. முசாபர்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் 109 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20பேரும் உயிரிழந்து உள்ளனர்.

மேலும், காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் பல குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts