புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கத்தின் விலை

சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 30 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குசந்தை மாற்றங்கள் ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால், தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் நேற்று திடீரென தங்கத்தின் விலையில் பெரிய அளவில் உயர்வு காணப்பட்டது. இதனால், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 713 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருப்பதால், பெரும்பாலான நகைக் கடைகள் கூட்டமின்றி காணப்படுகின்றன.

சில வாரங்களில் தங்கம் விலை ஒரு பவுன் 30 ஆயிரம் ரூபாயை ருங்கும் என நகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 816 ரூபாய் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 727 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Related Posts