புதிய கண்டுபிடிப்புகளை மாணவ சமுதாயத்தினர் உருவாக்க முன் வர வேண்டும்

புதிய கண்டுபிடிப்புகளை மாணவ சமுதாயத்தினர் உருவாக்க முன் வர வேண்டும் என  பாதுகாகாப்பு ஆராய்ச்சி துறை செயலர் சதீஷ் ரெட்டி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள வேல்டெக் பொறியியல்  கல்லூரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலாளரும், தலைவருமான சதீஸ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற 18 மாணவர்கள் உள்பட 914 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய  பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலர் சதீஷ் ரெட்டி, பிற நாடுகள் தயாரிக்கும்   தொழில்நுட்பதை   பின்பற்றக்கூடிய நாடக இந்தியா தற்போது இருக்கிறது அதனை மாற்றி மாணவர்கள் புதிய தொழில்நுட்பதை கண்டுபிடித்து தொழில்நுட்ப தலைமையாக வர வேண்டும் என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Related Posts