புதிய கல்வி கொள்கை தொடர்பான சூர்யாவின் கருத்து வரவேற்கதக்கது : இயக்குனர் சமுத்திரக்கனி

புதிய கல்வி கொள்கை தொடர்பான சூர்யாவின் கருத்து வரவேற்கதக்கது என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி, புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருப்பதாகவும்,   புதிய கல்வி கொள்கை தொடர்பான சூர்யாவின் கருத்து வரவேற்கதக்கது எனவும் தெரிவித்தார். பள்ளிகளில் சாதிய வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகவும், அதனை மறந்து மாணவர்கள் பயணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் மரணத்தை பற்றிய பயம் இருந்தால்தான் யாரும் பாலியல் குற்றங்களை செய்ய மாட்டார்கள் என்று சமுத்திரக்கனி  குறிப்பிட்டார்

Related Posts