புதிய தேர்வு விதிமுறை: அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இனி ‘அரியர்’ தேர்வுகளை, அடுத்த செமஸ்டரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று புதிய தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது..

ஒற்றை இலக்கப் பருவத்தேர்விலும், இரட்டை இலக்கப் பருவத் தேர்விலும் தோல்வியுற்ற பாடங்களை அந்த வகையான பருவத் தேர்வில் மட்டுமே எழுத முடியும் என்ற விதியை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், ஒரு பருவத் தேர்வில் அதிகபட்சம் 3 அரியர்களை மட்டுமே எழுத முடியும் என்ற விதிகளுக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும், அரியர் வைத்தவர்கள் பட்டப் படிப்பை முடிக்க மேலும் ஓராண்டு முதல் காத்திருக்க நேரிடும் என தெரிவித்திருந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பருவத்தேர்வில் அதிகபட்சம் 3 அரியர் மட்டுமே எழுத முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, நடப்பு மற்றும் அதனை தொடர்ந்து வரும் 3 பருவத் தேர்வுகளில் தோல்வியுற்ற பாடத்தை மீண்டும் எழுதி தேர்வாக வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இனி ‘அரியர்’ தேர்வுகளை, அடுத்த செமஸ்டரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று புதிய தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Related Posts