புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

4 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோஜ் சின்கா, தேசிய டிஜிட்டல் கம்யூனிகேசன்ஸ் கொள்கை 2018 திட்டத்தின் கீழ், புதிய தொலைதொடர்பு கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டிலான இந்த புதிய கொள்கையின் மூலம், வரும் 2022ம் ஆண்டிற்குள், புதிதாக 4 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், இதன்மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் என்ற நிலையை அடையும் எனவும் அவர் கூறினார். மேலும், இந்த புதிய தொலைதொடர்பு கொள்கை, பயனாளர்களின் வசதிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமின்றி, தொழில்நுட்ப அடிப்படையிலும் திறன் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இணைய சமநிலைக்கு ஆதரவளிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொலைதொடர்பு கொள்கை, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.

 

Related Posts