புதிய பாடத்திட்டத்தில் கி.பி மற்றும் கி.மு தொடரும் – செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தில் கி.பி மற்றும் கி.மு தொடரும் என்றும் சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை : ஜூன்-29

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை எழுந்து,பள்ளிபாடப்புத்தகங்களில் கி.பி மற்றும் கி.மு ஆகிய வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தில் கி.பி மற்றும் கி.மு தொடரும் என்றும் சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும்  தெரிவித்தார்.

இதேபோல், சிலை கடத்தல் விவகாரத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் சட்டமன்றக்குழு  தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைக் கடத்தல் பிரிவு தொடர்ந்து செயல்படுகிறது என்றும் பழங்கால சிலைகள் களவு போனதை கண்டுபிடிக்கவே இந்த பிரிவு உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கேட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்றும் தாமும் தெய்வ பக்தி உடையவன் என்றும் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு 35 லட்சம் ரூபாயில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Posts