புதிய பேருந்து சேவை களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

அரசு புதிய பேருந்துகளின் இயக்கத்தை சென்னையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி 109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 போக்குவரத்து கழகங்களுக்கு 370 புதிய அரசு பேருந்துகளின் சேவையை சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 65, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 30, கோவைக்கு 104, சேலத்துக்கு 57, கும்பகோணம்த்துக்கு 41 பேருந்துகள், விழுப்புரத்துக்கு 27, நெல்லைக்கு 26, மதுரைக்கு 20 என மொத்தம் 370 பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளன.

Related Posts