புதிய வேலை வாய்ப்பு என்பது எந்த துறையிலும் இல்லை: திருமாவளவன்

புதிய வேலை வாய்ப்பு என்பது கடந்த 10 ஆண்டுகளாக எந்த துறையிலும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஜனவரி 30 காந்தியடிகள் நினைவு நாளன்று உத்தரப்பிரதேசம் அலிகார் என்ற இடத்தில் இந்து மகா சபையை சேர்ந்த தேசிய பொறுப்பாளர் பூஜா சகுன் பாண்டே என்ற பெண்மணி காந்தியடிகள் உருவப்படத்தை பொது இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு அந்தக் காட்சியை  சமூகவலைதளங்களில் பரப்பிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு முழு பொறுப்பு பிரதமர் மோடி தான் என்ற அவர், இந்த நிகழ்வு மூலம் இந்திய கலாச்சாரத்தையேகேவலப்படுத்திய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்றார் இந்த அமைப்பைஅரசு செய்ய வலியுறுத்தி,வரும் 4ம்  தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அவர்தெரிவித்தார். புதிய வேலைவாய்ப்பு என்பது கடந்த 10 ஆண்டுகளாக எந்த துறையிலும் இல்லை என்ற திருமாவளவன்  இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் வேலைவாய்ப்பு இன்மையை அரசே திட்டமிட்டு உருவாக்குவதாகவும்  குற்றம்சாட்டினார்.

Related Posts