புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி 

தற்போது புழக்கத்தில் இருக்கும் 100, 50,  மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை புதிய வண்ணத்தில்  அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி 100, .50 ரூபாய்புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுப்பட்டது.  தற்போது 20 ரூபாய் புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் அந்த நோட்டு உள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களிலும் இருப்பது போல் தமிழ் உள்பட 15மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.  இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Posts