புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி

புதுக்கோட்டை அருகே மூத்தனாக்குறிச்சி கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை : ஏப்ரல்-21

புதுக்கோட்டை மாவட்டம் மூத்தனாக்குறிச்சியில் உள்ள அழகம்பாள் கோவில் திருவிழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், புதுக்கோட்டைதிருச்சிதஞ்சைமதுரை,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள்150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்தி சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் போட்டி போட்டு அடக்கினர்.

இறுதியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Posts