புதுக்கோட்டை  அருகே    150 கிலோ எடைக்கொண்ட பஞ்சலோக  அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி கிராமத்தில் ஊராட்சிமன்ற அலுலகம் கட்டுவதற்க்காக கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடத்திற்கான அடித்தளம் போடுவதற்கு ஜேசிபி எந்திரம் மூலம்பள்ளம் தோண்டியபோது  அங்கே அம்மன் சிலை ஒன்று தென்பட்டது. இதனை தொடர்ந்து  ஆழமாக தோண்டும் போது சிலைக்கான பீடம் மற்றும் கிரீடம் கிடைத்தது. இது குறித்து கோட்டாட்சியர் சூரியபிரபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிலையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பஞ்சலோகத்தால் ஆன பழமை வாய்ந்த அம்மன் சிலை 80 கிலோ மற்றும் பீடம் 70 கிலோ என மொத்தம் 150 கிலோ என   மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சிலை பொதுமக்களின் பார்வைக்காக அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.

Related Posts