புதுச்சேரியில் ஆயுதப்படை காவலர்  தூக்கிட்டு தற்கொலை 

புதுச்சேரி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் முகமது அலி. இவர் காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறையில் முகமது அலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது மனைவி அறை திறந்து பார்த்த போது  முகமது அலி  தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இட்த்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகமது அலி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததும்,  அதற்காக அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts