புதுச்சேரியில் இரண்டாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வலியுறுத்தி 300- க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதுச்சேரி, தமிழகப் பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகு , பைபர் படகுகளில் தினந்தோறும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முகத்துவாரப் பகுதியில் மணல் அடைந்துள்ளதால் கடலுக்குள் படகுகள் சென்றுவர முடியாத சூழல்
ஏற்பட்டுள்ளதோடு. மணல்மேடுகளில் அவ்வப்போது படகுகள் மோதி விபத்துகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.  இதையடுத்து முகத்துவாரத்தை தூர்வாருவதற்கு அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.   இதைத் தொடர்ந்து  மீன்பிடி துறைமுக முகத்துவர அடைப்பை தூர்வார வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில்   ஈடுபட்டுள்ளனர். அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்   அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts