புதுச்சேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடக்கம்

 

 

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக நிகழ்ச்சி, சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு முதற்கட்டமாக 5 ஆயிரம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Related Posts