புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வில், 13 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் தேர்ச்சி

புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 13 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி : மே-30

புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சட்டப்பேரவை வளாகத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 15 ஆயிரத்து 246 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாக அமைச்சர் தெரிவித்தார். இதில், 13 ஆயிரத்த 622 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். மாணவர்கள் 6 ஆயிரத்து 206 பேரும், மாணவிகள் 7 ஆயிரத்து 416 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கமலக்கண்ணன், இந்தாண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம், 89.35 சதவீதம் என்று கூறினார்.

Related Posts