புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஏழாவது  ஊதியக்குழு  பரிந்துரைகளை  அமல்படுத்த வலியுறுத்தி புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்,  சில வழித்தடங்களை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும்,  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக பணிமனை முன்பு  சாலை போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக சங்க நிர்வாகிகள் எச்சரித்தனர்.

Related Posts