புதுச்சேரியில் மியூசிக் தெரபி மையம் அமைக்கப்படும்:   நாராயசாமி 

புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கில் 54-வது கம்பன் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுசீலாவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் கம்பன் விழா அமைப்பாளர்கள் பாராட்டு பட்டம் வழங்கி கெளரவித்தனர்.பின்னர் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி,வெளிநாடுகளில் உள்ளதைப் போல் புதுச்சேரியிலும் மியூசிக் தெரபி மையம் அமைக்க வேண்டும் என்றுஇசைஞானி இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவரது கோரியிக்கையின்படி விரைவில் மியூசிக் தெரபி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய திரைப்பட பாடகி சுசிலா,  கம்பன் விழாவில் தான் கெரவிக்கப்பட்டது இறைவன் கொடுத்த வரம் என்று கூறிய பாரதிதாசனின்பாடலை மேடையிலேயே பாடினார். தொடர்ந்து பேசிய  அவர்,  பேசுவதை விட தனக்கு பாடுவது பிடிக்கும் என்று கூறி திரையிசை பாடல்கள் சிலவற்றை பாடினார்

Related Posts