புதுச்சேரியில் 112  என்ற அவசர தொடர்பு மையத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்

புதுச்சேரியில் அனைத்து சேவைகளுக்கான  112  என்ற அவசர தொடர்பு மையத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

 புதுச்சேரி காவல் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது. காவல்துறையின் அவசர அழைப்பிற்கு 100 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு 101,ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 போன்ற அவசர கால எண்கள்  அனைத்தும் ஒருங்கிணைந்து 112 என்று புதிதாக அவசர தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்காக 3 கோடியே 23லட்சம் ரூபாய் செலவில் மைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறையையும் காவல்துறைக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள கணினி மற்றும் பயிற்சி மையத்தையும் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று  துவக்கி வைத்தார். இதில் காவல்துறை தலைவர் சுந்தரி நந்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Posts