புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா

புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

      புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் இந்திய சினிமா ஸ்டீரிமிங் நிறுவனமான பிக்யூர்ஃபிளிக் சார்பில் சர்வதேச திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை முதலமைச்சர் நாராயணசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், பிரெஞ்சு துணைத்தூதர் கேத்ரின் ஸ்வாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முதல் படமாக பரதேசி, கல்லூரி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன் இயக்கிய தேசிய விருது பெற்ற டூ-லெட் திரைப்படம் திரையிடப்பட்டது. இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 124 பன்மொழி திரைப்படங்கள், குறும்படங்கள்,ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகின்றன.

Related Posts