புதுச்சேரி அருகே அண்ணனை கொலை செய்த தம்பி

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் அருள்ராஜ் மற்றும் ஆனந்தராஜ். இவர்கள் இருவருக்கும் மது அருந்திவிட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டனர். ஒருக்கட்டத்தில்ஆத்திரமடைந்த  ஆனந்தராஜ் அம்மி கல்லை கொண்டு அருள்ராஜை தாக்கியுள்ளார் இதில் படுகாயமடைந்த அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts