புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என சட்டப் பேரவை செயலர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கும் என சட்டப் பேரவை செயலர் வின்சென்ட்ராயர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகவும் , பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேரவையில் கேள்வி எழுப்பி என்.ஆர். காங்கிரஸ், அதிமுக , பாஜக  திட்டமிட்டுள்ளனர்.

 

Related Posts