புதுச்சேரி துணை நிலை ஆளுனரை திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் 

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுனரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Related Posts