புதுச்சேரி மக்களவைத் தொகுதி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  10ஆம் எண் வாக்குச்சாவடியில்  மறு வாக்குப் பதிவு 

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு கடந்த  18 தேதி தேர்தல்  நடைபெற்றது. இதில் காமராஜர் நகர் தொகுதிக்குப்பட்ட வெங்கட்ட நகர் 10ஆம் எண் வாக்குசாவடியில் பயன்படுத்தப்பட்ட விவிபாட் எந்திரத்தில் மாதிரி வாக்குபதிவின் போது பாதிவாகி இருந்த வாக்குகளை அழிக்காமல், வாக்குப் பதிவு நடைபெற்றது தெரியவத்தது. இதனை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குபதிவு ரத்து செய்யப்பட்டு அந்த ஒரு வாக்குசாவடியில் மட்டும் 12-ம் தேதி   மறு வாக்கு பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல்  அதிகாரி  அறிவித்திருந்தார். இத்ன்படி இன்று  காலை 7மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி 6மணிக்கு நிறைவு பெற்றது.‘ கடும் வெயிலில் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு தேர்தல் துறை சார்பில் இலவசமாக மோர் வழங்கப்பட்டது.

Related Posts