புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாக முக்கிய பங்கு வகிப்பது பொறியியல் மட்டுமே

புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாக முக்கிய பங்கு வகிப்பது பொறியியல் மட்டுமே என அமேசான் நிறுவன இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட விரகனூரில் உள்ள தனியார் கல்லூரியில் மனிதவள வல்லுனர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமேசான் நிறுவன இயக்குனர் மணிகண்டன், நாட்டில் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்கான வாய்ப்புகளை பொறியியல் மாணவர்கள் மேம்படுத்த வேண்டும் எனக் கூறினார். நாட்டில் வேலை தேடல் என்ற முறை மாறி, வேலை கொடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Related Posts