புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் காலமானார்.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ‘அவருக்கு வயது-96

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் தனது கிராமமான பூரணாங்குப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

96 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி அம்மாள் நேற்று இரவு உயிரிழந்தார் இதற்கிடையே கஜா புயல் நிவாரணம் நிதி பெற முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றிருந்தார். தாயார் இறந்த செய்தி அறிந்ததும், நாராயணசாமி டெல்லியில் இருந்து உடனடியாக புதுவை திரும்பினார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.ஈஸ்வரி அம்மாளின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணியளவில் பூரணாங் குப்பம் இடுகாட்டில் நடக்கிறது.

Related Posts