புத்ததேப் பட்டாச்சார்ஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மேற்குவங்காள முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான புத்ததேப் பட்டாச்சார்ஜி  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்காள முன்னாள் முதல்வரான புத்ததேப் பட்டாச்சார்ஜி  தெற்கு கொல்கத்தாவில் உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரின் வயது 75.

நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புத்ததேப் பட்டாச்சார்ஜி  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட கோளாறுகள் இருந்தன. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் மேற்குவங்காள முதல்வராக புத்ததேப் பட்டாச்சார்ஜி  இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக 1960 முதல் அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது

Related Posts