புயல் எச்சரிக்கையை தொடர்ந்து  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அதிகாரிகளுடன் ஆலோசனை 

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது அடுத்த 4 நாட்களில் புயலாக வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபனி புயல் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது கரையை கடக்கும் போது மணிக்கு150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து  சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் . புயல் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல் புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர், மாவட்டஆட்சியர்,பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன், அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். புயல் குறித்த தகவல் மற்றும் தொடர்புக்கு இலவச எண் 1077 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts