புயல் சேதம், எதிர்பார்த்ததை விட அதிகம் : டேனியல் ரிச்சர்டு

Want create site? Find Free WordPress Themes and plugins.

புயல் பாதித்த பகுதிகளை  பார்வையிட்டு வரும் மத்தியக்குழு இன்று நாகை மாவட்டத்தில் சேதப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறது. கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்,, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு நேற்று முன்தினம். புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. இதனை தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியிலும் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் சேதப்பகுதிகளை பார்வையிட்டது. நேற்று, கஜா பாதித்த தஞ்சை ஒரத்தநாடு அருகே புதூர் கிராமம் பகுதியில் மத்திய குழு  ஆய்வு மேற்கொண்டு சேத விபரங்களை பதிவு செய்தது. மல்லிப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்துமத்திய குழுவினர் கேட்டறிந்தனர்..

பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளரும், மத்திய குழுவின் தலைவருமான டேனியல் ரிச்சர்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை ஆய்வு செய்த்தாகவும், . பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். புயல் சேதம் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும். புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்லும் மத்திய குழுவினர் நாளை  சென்னை திரும்புகின்றனர்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts