புயல் பாதித்தபோது வராத மோடி, தேர்தலுக்காக தமிழகம் வருகிறார்: மு.க. ஸ்டாலின்

கடலூர் தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடியில் கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது எனவும் திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளனர் எனவும் தெரிவித்தார். கடலூர் கடல் சூழ்ந்த ஊர் மட்டும் அல்ல கண்ணீர் சூழ்ந்த ஊர் என்றும் இயற்கை எப்போது தாக்கினாலும் கடலூர் தப்பியது கிடையாது என்றும் அவர்கூறினார்

ஓர் ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு கலைஞர் தலைமையில் நடந்த ஆட்சி உதாரணம் என்றும் ஓர் ஆட்சி எப்படி இருக்க்கூடாது என்பதற்கு உதாரணம்தான் அதிமுக ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். கஜா புயல் பாதித்த ஒரு வாரம் கழித்து வந்து தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்த்தார். என்று கூறிய அவர், மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அமைந்துள்ளதுதான் திமுக ஆட்சி என்று கூறினார். புயல் பாதித்தபோது வராத மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழகம் வருகிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

Related Posts