புலனாய்வு துறையும், அமலாக்கத்துறையும் அவசரம் காட்டியது ஏன் ?

ப.சிதம்பரத்தை கைது செய்வதில் புலனாய்வு துறையும், அமலாக்கத்துறையும் அவசரம் காட்டியது ஏன் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு பழிவாங்கும் எண்ணத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கிறது என்று கூறினார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் அவரை கைது செய்தது அரசியல் நோக்கத்தை காட்டுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

Related Posts