புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் 14 பேர் பலி

நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.  நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வரும் சனிக்கிழமைபொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு அபுபக்கர் களமிறங்குகிறார். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணிநடைபெற்ற்றது. போர்ட் ஹார்கோர்ட் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அதோக்கியே அமியெசிமகா மைதானத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் புஹாரி உரையாற்றினார். அவரது பேச்சைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக பாதி திறக்கப்பட்ட சிறிய கேட் வழியாக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறிதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Related Posts