பெங்களூரில் பா.ஜனதா வேட்பாளர் பி.என். விஜய குமார் மரணம்

கர்நாடக மாநிலம் ஜெயாநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கர்நாடகா :  மே-04

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாள்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதியில் போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏவும், பாஜக வேட்பாளருமான பிஎன் விஜயகுமார் காலமானார். தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த விஜயகுமார் ஜெயாநகர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts