பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

8 அணிகளுக்கு இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய  பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் டிவில்லியர்ஸ், மொய்தீன் அலி தலா அரை சதம் அடித்தனர். மும்பை அணியில் குவின்டன் டி காக் 40  ரன்கள் எடுத்தார்.

Related Posts