பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 11-வது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 11-வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை : மே-24

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 80 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல், டீசல் விலையும் 21 காசுகள் உயர்ந்து, 72 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனையாகிறது. வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 3 ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, ஆட்டோ, கால் டாக்சி மற்றும் பேருந்து கட்டணங்கள் உயரும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Posts