பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 9-வது நாளாக இன்று மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 9-வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை : மே-22

சர்வதேச சந்தையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலுக்குப் பின் ஒருவாரமாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 32 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 79 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து, 71 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts