பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த  ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்:  செந்தில் பாலாஜி 

அரவக்குறிச்சி சட்டமன்ற  தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜி  க.பரமத்தி ஒன்றியம்,   துக்காச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம், உள்ளிட்டபகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அவருடன் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னால் அமைச்சர் சின்னசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது பேசிய செந்தில் பாலாஜி, பெட்ரோல் டீசல் விலை 2 மடங்காக உயர்ந்துவிட்டது எனவும், , கேபிள் டிவி கட்டணம் 70 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக உயர்ந்து விட்டது எனவும் கூறினார். விலைவாசியை கட்டுப்படுத்த மத்தியிலும் மாநிலத்திலும் ஆடசி மாற்றம் வரவேண்டும் எனவும்  . ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டார்.

Related Posts