பெட்ரோல் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது

Want create site? Find Free WordPress Themes and plugins.

பெட்ரோல் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கும் டீசல் 75 ரூபாய் 39காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

                சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய்  நிறுவனங்களால் தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டதால் விற்பனை விலை சற்று குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபாய் 92காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனையானது. இதேபோல், நேற்று முன்தினம் 74ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 82ரூபாய் 41 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 75ரூபாய்39 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 79ரூபாய் 31-காசுகளுக்கும்,டீசல் 71ரூபாய்34-காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts