பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை வழக்கம் போல் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை வழக்கம்போல அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 85 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் இன்று 30 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் 15 காசுகள் என பெட்ரோல் விற்பனையாகிறது. இதேபோல், டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 77ரூபாய் 74 காசுகள் என விற்பனை ஆனது. இன்று டீசலின் விலை 20 காசுகள் உயர்ந்து, 77 ரூபாய் 94 காசுகள் என விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைப்பதாகவும், பெட்ரோல் டீசல் விலை குறையாமல் போனால் பேருந்து பயணத்துக்கு மாற வேண்டியது தான் எனவும் தெரிவித்தனர்.

Related Posts