பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து எரிபொருள் விலையைக் குறைத்தன. ஆனாலும் மீண்டும் வழக்கம் போல் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் உயர்ந்து 85 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 4 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Related Posts