பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-20

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டிப் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்து விடக்கூடாது என்பதற்காக 20 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்துச்செய்து எரிபொருட்களின் விலை ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts