பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மக்களின் மிகப்பெரிய சுமை நீங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  புதிதாக 60 ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுமையத்தின் திறப்பு விழாவிற்காக வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், எரிவாயு, கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் இருமடங்காக உயர்த்துப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மக்களின் மிகப்பெரிய சுமை நீங்கியுள்ளதாகவும், பாஜக ஆளும் 13 மாநிலங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த மாநிலங்களில் 5 ரூபாயாக விலை குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Posts