பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைத்து விற்பனை

Want create site? Find Free WordPress Themes and plugins.

புதுவையில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

      கடலூர் நகர அரங்கில் உலக திருக்குறள் பேரவை சார்பில், பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுவை அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால் 5 விருதுகளை மத்திய அரசு வழங்கியதாகவும், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு தான் விருது கிடைக்க காரணம் எனவும் கூறினார். புதுவையில் சட்ட, ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் அமைதி பூங்காவாக திகழ்வதாக அவர் தெரிவித்தார். புதுவையில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யலாம் என ராகுல்காந்தி தெரிவித்தாலும், தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக உள்ளது எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts