பெட்ரோல், டீசல் விலை 16-வது நாளாக இன்று மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 16-வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை : மே-29

சென்னையில் நேற்று 81 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனையான பெட்ரோலின் விலை, இன்று காலையில், 17 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, நேற்று 73 ரூபாய் 3 காசுகளுக்கு விற்பனையான டீசல், 15 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பீப்பாய் ஒன்று 80 டாலராக விற்கப்பட்ட கச்சா எண்ணெய் தற்போது 75 டாலருக்கும் கீழே சென்றுள்ளது. இந்த விலைக்குறைப்பு நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, ஆட்டோ, கால் டாக்சி மற்றும் பேருந்து கட்டணங்கள் உயரும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

Related Posts