பெட்ரோல் டீசல் விலை 6 நாட்களில் 2 ரூபாய் வரை அதிகரிப்பு

இந்தியா முழுவதும்  பெட்ரோல், டீசல் விலை கடந்த 6  நாட்களில் 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆலையில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த 6  நாட்களில் ஏறத்தாழ 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.  பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 76 ரூபாய் 83 காசுகளாக விற்பனையாகிறது. டீசல் விலை 20 காசுகள்  உயர்ந்து லிட்டர் 70ரூபாய் 76காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. அதேநேரம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

Related Posts