பெட்ரோல் விலை குறைப்பு – 1 லிட்டர் பெட்ரோல் 81.35-க்கு விற்பனை

பெட்ரோல் விலை லிட்டருக்கு நேற்று ஒரு பைசா குறைக்கப்பட்ட நிலையில், இன்று 7 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னை : மே-31

பெட்ரோல் விலை நேற்று 60 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 1 பைசா தான் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று மேலும் 7 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 81 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து, 73 ரூபாய் 12 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 டாலர்கள் வரை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை மிக சொற்பமான அளவில் குறைப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts