பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவாக 80 ரூபாயைத் தாண்டியுள்ளது

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 10-வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவாக 80 ரூபாயைத் தாண்டியுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை : மே-23

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 68 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 58 காசுகளும் உயர்ந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 80 ரூபாய் 11 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 14 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் சுமையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கலால் வரி மற்றும் விற்பனையாளர்களின் கமிஷனைக் குறைத்து விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts