பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து 73 ரூபாய் 88  காசுகளுக்கு விற்பனையாகிறது

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் 26 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73 ரூபாய் 88 காசுகளுக்கு, விற்பனையாகிறது.

இதேபோல் டீசல் 13 காசுகள் குறைந்து 69 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனையாகிறது.  தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

 

Related Posts