பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவர் கைது

கொடைக்கானலில்  பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு எடுக்க 41 வயது மதிக்கதக்க பெண்  ஒருவர்  சென்றுள்ளார். மேல்புதுக்காடு பகுதியை சேர்ந்த சங்கர் என்ற முதியவர் அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்று கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில்  சங்கரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Posts